நிலவே உயிர் கொடு
நிரந்தரமான நீயோ
நிரந்தரமற்ற உலகில்
நீயாவது என்னை நீங்காது
உலா வருவாயா…
நேற்றும் வந்தாய்
இன்றும் வந்து விட்டாய்
நாளையும் வருவாய்
என் நினைவுகளை கடத்தி
மௌனத்தின் வழியே உறவான நீ
என் உயிர் உள்ளவரை
உலா வருவாயா…
காலத்தின் மாற்றம்
கடந்து போகும் உறவுகள்
கடுமையான சமயங்கள்
கலைந்து போகும்படி
காற்றோடு காற்றாக
கசிந்து உருகி போக
உலா வருவாயா…
தூய்மையான நீயோ
தூய்மையற்ற எண்ணங்கள்
துளை போட்டு இழுத்திட
உன் தூய்மையான மௌனத்தினால்
தூக்கி எரிந்திட
உலா வருவாயா...
Comments
Post a Comment