ஆசையாய் பேசிட நீ
ஆவலாய் கேட்டிட நான்
அனைத்தும் மறந்து போக
அணைத்தால் மறுத்திடுவேனா
பூ முகம் எனச் சொன்னாய்
பூத்திடு எனச் சொன்னாய்
பூக்காமல் இருந்திருந்தால்
பூகம்பம் வந்திருக்காதோ
காய் மனம் இருந்தாலும்
கனியென கவர்ந்தேனே
குருடியாக இருந்தேனே
இது காதலின் நியதிதானோ
Comments
Post a Comment